UPDATED : அக் 21, 2026 06:57 PM
ADDED : அக் 21, 2026 06:54 PM

துராபள்ளம் விவேகானந்தா பள்ளி மாணவர்கள், மாவட்ட தடகள போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் மாநில தடகள போட்டிகளுக்கு தேர்வாகியுள்ளனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே துராபள்ளம் பஜார் பகுதியில், விவேகானந்த மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள், கடந்த வாரம், பள்ளி கல்வி துறை சார்பில் திருவள்ளூரில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்றனர்.
அதில், 14 வயதுக்கு உட்பட்ட, 400 மற்றும் 600 மீட்டர் ஓட்டபந்தயத்தில், மாணவன் ஜஸ்வந், தங்கமும், 17 வயதுக்கு உட்பட்ட, 1500 மற்றும் 3000 மீட்டர் ஓட்டபந்தயத்தில், மாணவன் ரிக்காஷ், வெள்ளி பதக்கம் வென்றார்.
ஈட்டி எறிதல் போட்டியில், 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் மாணவன் கார்த்திக், வெள்ளி பதக்கம் வென்றார். மேலும், 4X400 மீட்டர் தொடர் ஓட்டபந்தயத்தில், விவேகானந்த பள்ளி மாணவர்கள் தங்க பதக்கம் வென்றனர்.
மாவட்ட அளவில் சாதனை படைத்த மேற்கண்ட மாணவர்கள், மாநில அளவில் நடைபெற இருக்கும் தடகள போட்டிகளில் பங்கேற்க தேர்வாகினர். சாதனை படைத்த மாணவர்களை, பள்ளியின் தாளாளர் மணி, முதல்வர் கோகன்ராஜ், உடற்கல்வி ஆசிரியர் சீனிவாசன் ஆகியோர் பாராட்டி கவுரவித்தனர்.
