/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.18 லட்சம் திருப்பி தராத நிறுவனத்துக்கு 'வாரன்ட்'
/
ரூ.18 லட்சம் திருப்பி தராத நிறுவனத்துக்கு 'வாரன்ட்'
ரூ.18 லட்சம் திருப்பி தராத நிறுவனத்துக்கு 'வாரன்ட்'
ரூ.18 லட்சம் திருப்பி தராத நிறுவனத்துக்கு 'வாரன்ட்'
ADDED : நவ 28, 2025 03:41 AM
சென்னை: வீடு தாமதமான நிலையில், பயனாளியின், 18 லட்சம் ரூபாயை திருப்பித்தராத கட்டுமான நிறுவனத்திற்கு, 'வாரன்ட்' பிறப்பித்து நடவடிக்கை எடுக்க, ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆலந்துார், ஆதம்பாக்கத்தில், 'ஜெயம் ஷெல்டர்ஸ்' நிறுவனம் சார்பில், 'ஜெயம் யுவர் டிரீம்' என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுகிறது. இதில் வீடு வாங்க, டி.ஆர்.நரசிம்மன், என்.ஹேமலதா நரசிம்மன் ஆகியோர், 18 லட்ச ரூபாய் செலுத்தினர்.
ஆனால், ஒப்பந்தத்தின் அடிப்படையில் அந்நிறுவனம் கட்டுமான பணிகளை மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், வீடு வாங்குவதில் இருந்து விலக, பணம் செலுத்தியோர் முடிவு செய்தனர்.
இதற்கு அந்நிறுவனம் ஒப்புக்கொள்ளாத நிலையில், நரசிம்மன் ரியல் எஸ்டேட் ஆணையத்தில் புகார் செய்தார். இதை விசாரித்த ஆணையம், மனுதாரர் செலுத்திய, 18 லட்சம் ரூபாயை வட்டியுடன் திருப்பித்தரும்படி, 2022 நவ., 22ல் உத்தரவிட்டது.
உத்தரவை கட்டுமான நிறுவனம் செயல்படுத்தாத நிலையில், நரசிம்மன் ரியல் எஸ்டேட் ஆணையத்தில் மீண்டும் புகார் செய்தார். இது தொடர்பாக, ஆணைய தலைவர் ஷிவ்தாஸ் மீனா தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, மனுதாரருக்கு கட்டுமான நிறுவனம், 18 லட்சம் ரூபாயை திருப்பித்தரவில்லை. எனவே, வருவாய் மீட்பு சட்டப்படி வாரன்ட் பிறப்பித்து, அந்நிறுவனத்திடம் இருந்து, 18 லட்சம் ரூபாயை வட்டியுடன் வசூலிக்க, மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

