/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
/
பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
ADDED : ஜன 12, 2024 09:45 PM
கனகம்மாசத்திரம்:திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் ஊராட்சிக்கு உட்பட்டது வேணுகோபாலகிருஷ்ணாபுரம் கிராமம். இங்கு 2017 -- 18ம் ஆண்டு 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.
அமைத்து ஒருவாரம் மட்டுமே பயன்பாட்டில் இருந்த நிலையில் பின் மூடப்பட்டது. நான்கு ஆண்டுகள் ஆகும் நிலையில் இதுவரை திறக்கப்படாமல் பயன்பாடின்றி மூடி வீணாகி வருகிறது. இதனால் கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடில் மக்கள் தவித்து வருகின்றனர்.
குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.