/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நீர்நிலைகளில் தேங்கியுள்ள தண்ணீர்; குடிநீர், விவசாயத்திற்கு பஞ்சமில்லை

ADDED : மார் 18, 2025 12:48 AM

ஊத்துக்கோட்டை; திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணி, கொசஸ்தலை, கூவம் ஆகிய ஆறுகள் பாய்கிறது. வடகிழக்கு பருவமழையால், இந்த ஆறுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால், இந்த ஆறுகளில் கட்டப்பட்ட அணைக்கட்டு, செக்டேம் ஆகியவை நிரம்பியது. மேலும், குளம், குட்டை, ஏரி ஆகிய நீர்நிலைகளும் நிரம்பின. தற்போது, கோடை வெயில் துவங்கிய நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த காலகட்டங்களில் நீர்நிலைகளில் தண்ணீர் குறைந்து காணப்படும்.
ஆனால், ஆரணி ஆற்றின் நடுவே கட்டப்பட்ட சிட்ரபாக்கம் அணைக்கட்டு, செங்காத்தாகுளம், பாலேஸ்வரம் உள்ளிட்ட பெரும்பாலான நீர்நிலைகளில், 90 சதவீதம் அளவிற்கு நீர் இருப்பு உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
கோடைக்காலத்தில் செக்டேம், அணைக்கட்டு, ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளில் தண்ணீரின்றி வறண்டு காணப்படும். ஆனால், தற்போது நீர்நிலைகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால், மூன்று மாதத்திற்கு குடிநீர், விவசாயத்திற்கு போதுமான அளவு தண்ணீர் கிடைக்கும் என, நம்புகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.