/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பில்லாத பங்காரு கால்வாய் ஏரியில் நீர் சேகரமாவதில் சிக்கல்
/
பராமரிப்பில்லாத பங்காரு கால்வாய் ஏரியில் நீர் சேகரமாவதில் சிக்கல்
பராமரிப்பில்லாத பங்காரு கால்வாய் ஏரியில் நீர் சேகரமாவதில் சிக்கல்
பராமரிப்பில்லாத பங்காரு கால்வாய் ஏரியில் நீர் சேகரமாவதில் சிக்கல்
ADDED : ஜூலை 17, 2025 02:18 AM

திருமழிசை:திருமழிசை அருகே செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் பங்காரு கால்வாய் பராமரிப்பில்லாமல்உள்ளதால், மழைக்காலங்களில் ஏரிக்கு நீர் சேகரமாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் அடுத்த கேசாவரம் அணைக்கட்டில் உருவாகும் கூவம் ஆறு, பேரம்பாக்கம், சத்தரை, அகரம், அதிகத்துார், மணவாளநகர், அரண்வாயல், புதுச்சத்திரம், ஜமீன்கொரட்டூர், மதுரவாயல், கோயம்பேடு வழியாக, சென்று நேப்பியர் பாலம் அருகே வங்க கடலில் கலக்கிறது.
இதில் ஜமீன்கொரட்டூர் பகுதியில் உள்ள தடுப்பணையில் நீர் எப்போதும் கூவம் ஆற்றில் செல்லும் வகையிலும், அணைக்கட்டு பகுதியில் உள்ள ஷட்டர்கள் திறக்கப்பட்டால், பங்காரு கால்வாய் மூலம் மேல்மணம்பேடு, நேமம், குத்தம்பாக்கம் வழியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வெள்ளநீர் செல்லும்.
இதில் குத்தம்பாக்கம் பகுதியில் பங்காரு கால்வாய் பராமரிப்பில்லாததால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் பங்காரு கால்வாயை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் மழைநீர் உட்புகும் நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் செல்லும் வகையில் பங்காரு கால்வாயை சீரமைக்க வேண்டுமென பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.