/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாலவாக்கம் ஏரியில் கலங்கல் சேதம் வீணாகும் தண்ணீர்
/
பாலவாக்கம் ஏரியில் கலங்கல் சேதம் வீணாகும் தண்ணீர்
ADDED : டிச 30, 2024 01:42 AM

ஊத்துக்கோட்டை:எல்லாபுரம் ஒன்றியம், லட்சிவாக்கம் ஏரி, 300 ஏக்கருக்கு அதிகமான பரப்பளவு கொண்டது. மழைநீர் மற்றும் சுருட்டப்பள்ளி அணைக்கட்டில் இருந்து தமிழக ஏரிகளுக்கு திறக்கப்படும் நீர் ஆகியவை முக்கிய நீர் ஆதாரம்.
லட்சிவாக்கம், பெரம்பூர் மற்றும் சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கு லட்சிவாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது. மேலும், இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பினால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, குடிநீர், விவசாயத்திற்கு போதுமான அளவு தண்ணீர் கிடைக்கும்.
இந்த ஏரியில் மூன்று மதகு, மூன்று கலங்கல் உள்ளது. இதில் ஊத்துக்கோட்டை - பெரியபாளையம் சாலையை ஒட்டி உள்ள கலங்கல் சேதம் அடைந்து மணல் மூட்டை போட்டு அடைக்கப்பட்டு உள்ளது.
ஆனாலும், தண்ணீர் வீணாகி செல்கிறது. நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, லட்சிவாக்கம் ஏரியின் சேதம் அடைந்த கலங்கலை சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

