/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூண்டியில் இருந்து புழல் ஏரிக்கு நீர் திறப்பு
/
பூண்டியில் இருந்து புழல் ஏரிக்கு நீர் திறப்பு
ADDED : ஜன 01, 2025 09:37 PM
ஊத்துக்கோட்டை:சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில், திருவள்ளூர் மாவட்டம், பூண்டி கிராமத்தில் உள்ள சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. கொசஸ்தலை ஆற்றின் நடுவே கட்டப்பட்ட இந்த நீர்த்தேக்கத்தின் முழு கொள்ளளவு, 3.23 டி.எம்.சி., நீர்மட்டம், 35 அடி.
மழைநீர் மற்றும் கிருஷ்ணா நீர் ஆகியவை முக்கிய நீர் ஆதாரம். சமீபத்தில் பெய்த வடகிழக்குப் பருவமழை மற்றும் கிருஷ்ணா நீர் ஆகியவற்றால், நீர்த்தேக்கம் முழுதும் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது.
நேற்று, காலை 6:00 மணி நிலவரப்படி, தற்போது, 3.125 டி.எம்.சி., நீர் உள்ளது. நீர்மட்டம், 34.93 அடி. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வினாடிக்கு, 1,000 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. அங்குள்ள இணைப்பு கால்வாய் வாயிலாக, புழல், செம்பரம்பாக்கம் ஏரிக்கு, 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.