/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழுதாவூரில் மீன் பிடிப்பதற்காக கால்வாயில் இருந்து நீர் வெளியேற்றம்

ADDED : ஏப் 01, 2025 10:47 PM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டது தொழுதாவூர் கிராமம். இங்கு, மணவூர் செல்லும் சாலையின் குறுக்கே, பழையனூர் ஓடைக்கு செல்லும் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய், 3 கி.மீ., நீளமும், 15 - 60 அடி அகலமும் உடையது. இந்த ஓடை கால்வாயில், எப்போதுமே தண்ணீர் இருக்கும்.
இந்த கால்வாயில் தேங்கியுள்ள தண்ணீரை, அப்பகுதி கால்நடைகள் பருகி தாகத்தை தீர்த்து வருகின்றன. தற்போது, கோடைக்காலம் துவங்கி வெயில் வாட்டிவதைக்கிறது. இதனால் குளம், குட்டை போன்ற நீர்நிலைகள் வற்றி வரும் நிலையில், கால்வாய் நீரை நம்பியே அப்பகுதி கால்நடைகள் மேய்ச்சலுக்கு வருகின்றன.
இந்நிலையில், ஓடை கால்வாயில் கண்டை, ஜிலேபி போன்ற மீன்கள் அதிகம் உள்ளன. அதை பிடித்து விற்பனை செய்யும் நோக்கில், அதே கிராமத்தைச் சேர்ந்த சில மர்மநபர்கள், மோட்டார் வாயிலாக தண்ணீரை வெளியேற்றி, மீன் பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இதனால், கால்நடை வளர்ப்போர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.