UPDATED : மே 15, 2026 06:20 PM
ADDED : மே 15, 2026 06:11 PM

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில், கோடைகால தண்ணீர் பந்தலை கலெக்டர் துவக்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில், 1,166 ரேஷன் கடைகளில், அரிசி, பருப்பு போன்ற ரேஷன் பொருட்களை மக்கள் வாங்கி செல்கன்றனர். கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் மக்களின் தாகம் தீர்க்கும் வகையில், அனைத்து ரேஷன் கடைகளிலும் தண்ணீர் பந்தல் அமைக்க, கலெக்டர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று, திருவள்ளூர் சி.வி.நாயுடு சாலையில் அமைந்துள்ள பெரும்பாக்கம் கூட்டுறவு ரேஷன் கடையில், கலெக்டர் பிரதாப் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, மோர் மற்றும் தர்பூசணி பழங்களை வழங்கினார்.
அதேபால், மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது எனவும் கலெக்டர் தெரிவித்தார்.
இதில், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ஜெயஸ்ரீ, துணை பதிவாளர்கள் பாலாஜி, மங்கலதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.
