/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
9,900 கன அடி பூண்டிக்கு நீர்வரத்து
/
9,900 கன அடி பூண்டிக்கு நீர்வரத்து
ADDED : அக் 25, 2025 09:28 PM
ஊத்துக்கோட்டை: அக். 26-: பூண்டி நீர்த்தேக்கத்திற்கு மழைநீர் மற்றும் கிருஷ்ணா நீர் வினாடிக்கு, 9,900 கன அடி வந்து கொண்டிருக்கிறது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, பலத்த மழை பெய்து வருகிறது.
சென்னையின் குடிநீர் ஆதாரமான பூண்டி நீர்த்தேக்கத்திற்கு மழைநீர் வினாடிக்கு, 9,440 கன அடி, கிருஷ்ணா நீர் 460 கன அடி என, மொத்தம் 9,900 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
இதன் மொத்த கொள்ளளவான, 3.23 டி.எம்.சி.,யில், 2.758 டி.எம்.சி., நீர் உள்ளது. நீ
ர்மட்டம், 35 அடியில், 33.79 அடி உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து ஏற்பட்டதால், நான்கு மதகுகள் வழியே வினாடிக்கு, 9,500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதனால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஒதப்பை, நெய்வேலி, சடையான்குப்பம் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

