/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திரு/கோடைக்கு தாகம் தீர்க்க வந்த தர்பூசணி
/
திரு/கோடைக்கு தாகம் தீர்க்க வந்த தர்பூசணி
ADDED : பிப் 17, 2025 02:15 AM

ஊத்துக்கோட்டை:நள்ளிரவு முதல் விடியற்காலை வரை பனிப்பொழிவு இருந்தாலும், காலையில் சூரியனின் கதிர்கள் வெளியே வரும் வரை குளிர்ச்சியான சூழல் நிலவுகிது. பின்னர் வெயிலின் தாக்க துவங்குகிறது.
கோடை காலம் துவங்க உள்ள நிலையில், கூல் டிரிங்ஸ் கடைகள் புதிது, புதிதாக உருவாக துவங்கி விட்டன. ஆனாலும் கோடையில் இருந்து தப்பிக்க இயற்கை நமக்கு அளித்த கொடை தர்பூசணி, நுங்கு, இளநீர். திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், தர்பூசணி வர துவங்கி உள்ளது.
அங்குள்ள பஜார், திருவள்ளூர் சாலையில் தர்பூசணி கடைகள் போடப்பட்டு உள்ளன. இதுகுறித்து கடை வியாபாரி ஒருவர் கூறுகையில், கோடை காலம் துவங்க உள்ள நிலையில், ஆந்திராவில், சத்தியவேடு, பாண்டூர் ஆகிய பகுதிகளில் இருந்து தர்பூசணி வாங்கி வந்து விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.20க்கும் விற்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.