/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பன்றி தொல்லைக்கு தீர்வு காணாவிட்டால் போராட்டம் நடத்துவோம்: மக்கள் ஆவேசம்
/
பன்றி தொல்லைக்கு தீர்வு காணாவிட்டால் போராட்டம் நடத்துவோம்: மக்கள் ஆவேசம்
பன்றி தொல்லைக்கு தீர்வு காணாவிட்டால் போராட்டம் நடத்துவோம்: மக்கள் ஆவேசம்
பன்றி தொல்லைக்கு தீர்வு காணாவிட்டால் போராட்டம் நடத்துவோம்: மக்கள் ஆவேசம்
ADDED : பிப் 18, 2026 05:26 AM

திருவாலங்காடு: திருவாலங்காடில் பன்றி தொல்லை அதிகரித்துள்ளதால், அதை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, அப்பகுதி மக்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஊராட்சியில், சன்னிதி தெரு, தெற்கு மாடவீதி, வடக்கு மாடவீதி உள்ளிட்ட பகுதிகளில், 1,500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இங்கு, நாளுக்கு நாள் பன்றிகளின் தொல்லை அதிகரித்து வருவதால், குடியிருப்பு மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இதுகுறித்து, குடியிருப்பு மக்கள் கூறியதாவது:
திருவாலங்காடு ஊராட்சியில் பி.டி.ஓ., அலுவலகம், வடாரண்யேஸ்வரர் கோவில், காளியம்மன் கோவில், திருக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பன்றிகள் சுற்றித் திரிகின்றன.
இவை, சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளை கிளறுவதால் துர்நாற்றம் வீசுகிறது.
மேலும், வாகனங்கள் செல்லும்போது திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர்.
மேலும், குடியிருப்பு அருகே பன்றிகள் சுற்றித் திரிவதால் நோய் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே, குடியிருப்பு மக்களுக்கும், பக்தர்களுக்கும் இடையூறாக உள்ள பன்றிகளை பிடிக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையென்றால், திருவாலங்காடு தேரடியில் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

