ADDED : பிப் 13, 2024 06:28 AM
பொதட்டூர்பேட்டை: பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருத்தணி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர், விசைத்தறி நெசவு தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கூலி உயர்வு குறித்து, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
துணி நுால் உற்பத்தியாளர்களுக்கும், நெசவாளர்களுக்கும் இடையே மீண்டும் பேச்சு நடத்த வருவாய் துறையினர் மற்றும் தொழிலாளர் துறையினர் முன்வர வேண்டும் என, கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாததால், அதிருப்தி அடைந்த நெசவாளர்கள், பொதட்டூர்பேட்டையில் நேற்று வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிப்பட்டு வட்டாட்சியர் பரமசிவம், நெசவாளர்களிடம் பேச்சு நடத்தினர்.
நாளை 14ம் தேதி திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமரச பேச்சு நடத்த உறுதி அளித்தார். அதை ஏற்று, நெசவாளர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டு சென்றனர்.