/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொதட்டூரில் நெசவு பணிகள் தீவிரம்
/
பொதட்டூரில் நெசவு பணிகள் தீவிரம்
ADDED : டிச 09, 2024 02:16 AM

பொதட்டூர்பேட்டை:திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஒன்றியங்களுக்கு உட்பட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில், நெசவு தொழில் பாரம்பரியமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில், கடந்த நுாற்றாண்டில் கைத்தறி நெசவும் தற்போது விசைத்தறி மற்றும் பெடல் லுாம் நெசவு அதிகளவில் நடந்து வருகிறது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் நெசவு மற்றும் நெசவு சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். குடிசை தொழிலாக வீடுகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த நெசவு இப்போது தொழிற்கூடங்களில் தனி நிறுவனங்களாகவும் வளர்ச்சி பெற்றுள்ளது.
விசைத்தறி நெசவில், வேட்டி, சேலை, கைகுட்டை, லுங்கி, சுடிதார் உள்ளிட்ட ரகங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், புயல் மழை காரணமாக, இரண்டு வாரங்களாக பாதிக்கப்பட்டிருந்த நெசவு தொழில், தற்போது வெயில் காய துவங்கியுள்ளதால், சுறுசுறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பசை சேர்க்கப்பட்ட நுால் கட்டுகளை வெயிலில் காய வைக்க முடியாமல் பொதட்டூர்பேட்டை,சொரக்காய்பேட்டை, நல்லவானம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நெசவு தொழிலாளர்கள் அவதிப்பட்டு வந்தனர். தற்போது மீண்டும் முழுவீச்சில் நுால் கட்டுகளை காய வைப்பதில் ஈடுபட்டு வருகின்றனர்.