/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கடலீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் விமரிசை
/
கடலீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் விமரிசை
ADDED : டிச 03, 2025 05:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி: தாடூர் கடலீஸ்வரர் கோவிலில் நடந்த திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் தரிசித்தனர்.
திருத்தணி அடுத்த தாடூர் கிராமத்தில் உள்ள யோகீஸ்வரி சமேத கடலீஸ்வரர் கோவிலின் மகா கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. நேற்று கோவில் வளாகத்தில் உற்சவர்கள் யோகீஸ்வரி- கடலீஸ்வரருக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது.
இதில் வேத விற்பனர்கள் மந்திரங்கள் ஓத கடலீஸ்வரர்-யோகீஸ்வரி அம்மையாருக்கு திருக்கல்யாணம் நடந்தது.
நிகழ்ச்சியில் திருத்தணி மற்றும் சுற்றியுள்ள கிராம பக்தர்கள் வழிப்பட்டனர்.

