/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆந்திராவில் சீசன் முடிந்தும் களைகட்டும் கள் விற்பனை
/
ஆந்திராவில் சீசன் முடிந்தும் களைகட்டும் கள் விற்பனை
ஆந்திராவில் சீசன் முடிந்தும் களைகட்டும் கள் விற்பனை
ஆந்திராவில் சீசன் முடிந்தும் களைகட்டும் கள் விற்பனை
ADDED : ஜூன் 27, 2025 02:16 AM

ஆர்.கே.பேட்டை:ஆந்திர மாநிலம் பலிஜிகண்டிகையில் விற்பனை செய்யப்படும் கள் குடிப்பதற்காக, தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் வாகனங்களில் சென்று வருகின்றனர்.
ஆர்.கே.பேட்டையில் இருந்து 6 கி.மீ., தொலைவில் ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்திற்கு உட்பட்ட பலிஜிகண்டிகை கிராமம் அமைந்துள்ளது. ஆந்திராவில் சட்டப்பூர்வமாக கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பலிஜிகண்டிகை அடுத்த பாலசமுத்திரம், ராசபாளையம், வீர்லகுடி, கன்னிகாபுரம் உள்ளிட்ட பகுதியில் ஏராளமான தென்னந்தோப்புகள் உள்ளன. இந்த தோப்புகளில் கள் இறக்கப்படுகிறது. பலிஜிகண்டிகையில் அரசு அனுமதியுடன் செயல்படும் கடைகளில், கள் விற்பனைக்கு வைக்கப்படுகிறது.
தென்னை மரங்களில் இருந்து கிடைக்கும் கள்ளை குடிப்பதற்காக திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலுார் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் சென்று வருகின்றனர். கள் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும் என கூறப்படுகிறது.
தற்போது, கோடைக்காலம் முடிந்து, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையிலும், பலிஜிகண்டிகை கள்ளுக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.