sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

களைகட்டியது பொங்கல் பொருள் விற்பனை:பூக்கள், கரும்பு விலை இரட்டிப்பு

/

களைகட்டியது பொங்கல் பொருள் விற்பனை:பூக்கள், கரும்பு விலை இரட்டிப்பு

களைகட்டியது பொங்கல் பொருள் விற்பனை:பூக்கள், கரும்பு விலை இரட்டிப்பு

களைகட்டியது பொங்கல் பொருள் விற்பனை:பூக்கள், கரும்பு விலை இரட்டிப்பு


ADDED : ஜன 13, 2024 10:51 PM

Google News

ADDED : ஜன 13, 2024 10:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை இன்று போகியுடன் துவங்கவுள்ளதை தொடர்ந்து, நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு மக்கள் தேவையான பூஜை பொருட்களை வாங்க ஆர்வம் காட்டு வருகின்றனர்.

அதே நேரத்தில் பொங்கல் பானை, மஞ்சள், போகி மேளம் செங்கரும்பு என அனைத்து பொருட்களும் விலை இரட்டிப்பாக இருந்தது.

தமிழகம் முழுதும் இன்று போகி பண்டிகையுடன் பொங்கல் விழா துவக்கி, நாளை தைப்பொங்கல், நாளை மறுநாள் மாட்டுப்பொங்கல், 17ம்தேதி காணும் பொங்கல் விழா என தொடர்ச்சியாக கொண்டாடப்பட உள்ளது.

அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று போகி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இன்று அதிகாலையில் மக்கள் எழுந்து பனை ஓலைகள், போகி பூண்டு மற்றும் வீட்டில் இருந்த தேவையற்ற பொருட்களை கொளுத்தி போகியை கொண்டாடினர்.

நேற்று அதிகளவில் பனிப்பொழிவும் இருந்தும் மக்கள் ஆர்வத்துடன் அதிகாலையில் எழுந்து தங்களது வீடுகள் முன் பழைய பொருட்களை எரியூட்டு கொண்டாடினர்.

பொங்கல் விழா கொண்டாடுவதற்கு தேவையான புதுப் பானை,கரும்பு, மஞ்சள் செடிகள், தேங்காய், பழங்கள், பூசணிக்காய், பூக்கள் மற்றும் வெத்தலை, வாழைப்பழம் போன்ற பூஜைக்கு தேவையானஅனைத்து பொருட்களின் விலையும் இரட்டிப்பானது.

இந்த விலை உயர்வு இருந்தாலும் பொதுமக்கள் பொங்கல் விழா கொண்டாட ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் வெங்கத்துார், மணவாள நகர் ஆகிய பகுதியில் சாலையோர கடைகளில் செங்கரும்பு, மஞ்சள் செடிகள், பழங்கள், வாழை இலை, பூசணிக்காய் உள்பட பல்வேறு பூஜை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்த பொருட்கள் வாங்குவதற்கு நேற்றே பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர்.

மஞ்சள் செடி ஒன்றுக்கு 60---90 ரூபாய்; செங்கரும்பு, ஒரு ஜோடி 100---150 ரூபாய்; ஒரு டஜன் மஞ்சள் வாழைப்பழம், 40- ----60 ரூபாய்; வாழை இலை ஒன்று, 10 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது. விலை இரட்டிப்பாக இருந்தாலும் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.

போகி மேளம் ஒன்று 80 ரூபாய் முதல் 450 ரூபாய் வரை விற்பனையாகிறது. இந்த வருடம் பொங்கல் பானை தயாரிப்பு போதிய இல்லாததால் பானை உற்பத்தி பாதித்துள்ளதால் விலையும் அதிகரித்து உள்ளன என பானை விற்பனையாளர் ஒருவர் தெரிவித்தார். மண் பானைகள் 450 ரூபாய் முதல் 750 வரை தரத்திற்கேற்றார் போல் விற்பனை செய்யப்பட்டது.

விலை ஏற்றத்தையும் பொருட்படுத்தாமல், மண் பாண்டங்களை வாங்கிசென்றனர்.

அதிகரிப்பு


திருத்தணி பூ மார்கெட்டில் பொங்கல் பண்டிகை ஒட்டி பூக்கள் விலை திடீரென அதிகரித்து விற்பனை செய்யப்பட்டன. அதிகபட்சமாக மல்லிகை பூ ஒரு கிலோ 2,500 ரூபாயும், கனகாகாம்பரம் ஒரு கிலோ, 1,000ரூபாய், சாமந்தி ஒரு கிலோ, 250-----450 ரூபாய், முல்லை, 1,500 ரூபாய், சம்பங்கி ஒரு கிலோ, 80 ரூபாய், ரோஜா ஒரு கிலோ, 250 என விற்பனை செய்யப்பட்டது.

தொடர் மழையால் அன்றாட கூலித்தொழிலாளர்கள் வருவாய் இன்றி தவிப்பு, விவசாய நிலங்கள் மழைநீரில் வீணாகி விவசாயிகளுக்கு பெரும் வருவாய் இழப்பு போன்றவற்றால் மக்களிடம் பணபுழக்கம் இல்லை. ஆனால் காய்கறி முதல் அனைத்து பொருட்களும் இரட்டிப்பு விலையில் விற்பனையானது. இந்த ஆண்டு ஆடம்பரம் இல்லாத, மிகவும் எளிமையான பொங்கலாகத்தான் இருக்கும்.

- ரா.ராதிகா,

இல்லத்தரசி, மணவாள நகர்.

- நமது நிருபர் குழு --






      Dinamalar
      Follow us