ADDED : ஏப் 17, 2026 02:54 AM
அ நிறம் | அளவு
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே, ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி தவறாக நடந்துக்கொண்ட வாலிபரை, போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி அருகே நங்கம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர், 23; வெல்டர். இவர், பொன்னேரி அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி, தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கும்மிடிப்பூண்டி மகளிர் போலீ சார், ராஜசேகர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து, நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
