தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ நல வாரிய உறுப்பினர் விண்ணப்பம் வரவேற்பு

 நல வாரிய உறுப்பினர் விண்ணப்பம் வரவேற்பு

 நல வாரிய உறுப்பினர் விண்ணப்பம் வரவேற்பு


ADDED : ஜூன் 29, 2026 10:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2026 10:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், புதிரை வண்ணார் நல வாரியத்தில் உறுப்பினராவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, கலெக்டர் கவிதா தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் கலெக்டர் கவிதா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் புதிரை வண்ணார் நல வாரியத்தை, தற்போது திருத்தியமைக்க வேண்டியிருப்பதால், பொது சேவை செய்யும் புதிரை வண்ணார் சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தங்கள் விண்ணப்பங்களை, பொது சேவை செய்தமைக்கான விபரங்கள் மற்றும் அதற்கான புகைப்படத்துடன், வரும் ஜூலை 10ம் தேதிக்குள், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us