/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரி நகராட்சி குப்பையால் பாழாகி வரும் ஆரணி ஆறு திடக்கழிவு மேலாண்மை திட்டம் என்னாச்சு?

ADDED : மே 28, 2025 11:34 PM

பொன்னேரி பொன்னேரி நகராட்சியில், 27 வார்டுகளில் உள்ள 10,027 குடியிருப்புகள், 1,721 வணிக நிறுவனங்கள் வாயிலாக, தினமும் 10,000 -- 11,000 கிலோ குப்பை கழிவு வெளியேற்றப்படுகிறது.
இவை, நகராட்சி துாய்மை பணியாளர்களால் சேகரிக்கப்பட்டு, பொன்னேரி திருவாயற்பாடியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்ட கிடங்கிற்கு எடுத்து செல்லப்பட்டு தரம் பிரிக்கப்படுகின்றன.
இதில், மட்கும் குப்பையை கொண்டு இயற்கை மற்றும் மண்புழு உரங்கள் தயாரிக்கப்படுகின்றன. பிளாஸ்டிக், ரப்பர் உள்ளிட்ட மட்காத குப்பையை தனியாக பிரித்து எடுத்து, மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகின்றன.
நகராட்சி நிர்வாகத்தால் குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் இருந்து சேகரிக்கப்படுவதில், 4.000 - 6,000 கிலோ வரை மட்டுமே திடக்கழிவு மேலாண்மை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. மற்றவை, பொன்னேரி ஆரணி ஆற்றின் கரையோரங்களில் குவிக்கப்படுகிறது.
நகராட்சியின் குப்பை கழிவால், ஆரணி ஆறு பாழாகி வருகிறது. ஆரணி ஆற்றில் கொட்டப்படும் கழிவுகள், நீர்வரத்து இருக்கும்போது தண்ணீருடன் அடித்து செல்லப்பட்டு, பழவேற்காடு கடலில் கலக்கிறது. இதனால், கடல்வாழ் உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது.
நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். மொத்த கழிவுகளையும் தரம்பிரித்து கையாள்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.