/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழுதாவூர் அரசு பள்ளியில் பராமரிப்பு பணி விடுமுறையில் என்ன செய்தீங்க ஆபீசர்ஸ்? நுாலகம் வகுப்பறையான அவலம்

ADDED : ஆக 25, 2025 10:48 PM

திருவாலங்காடு, திருவாலங்காடு ஒன்றியம் தொழுதாவூர் ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி 45 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
இங்கு, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, 150 மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளி கட்டடங்கள் பொலிவிழந்து உள்ளதால், வண்ணம் மற்றும் சேதமடைந்த ஜன்னல் கதவுகளை சீரமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டது.
அதன்படி, 2024- - --25ம் ஆண்டு ஒன்றிய பொது நிதியில் இருந்து, ஐந்து லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 'டெண்டர்' விடப்பட்டு, கடந்த 2ம் தேதி பணி துவக்கப்பட்டது.
அதன்படி, நான்கு பள்ளி கட்டடங்களை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், தற்போது பெயின்ட் அடிக்கும் பணி நடந்து வருவதால், வகுப்பறையில் மாணவர்கள் அமர்ந்து பயில முடியாத நிலை உள்ளது. இதனால், மாணவர்கள் நுாலக கட்டடத்திலும், வி.ஏ.ஓ., அலுவலக வளாகத்திலும் அமர வைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தொழுதாவூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பள்ளி கட்டட சீரமைப்பு பணிகளை, கோடை விடுமுறையான ஏப்., அல்லது மே மாதத்தில் செய்திருக்கலாம். அதை பின்பற்றாமல், பள்ளி இயங்கும் நாட்களில் செய்ய உத்தரவிட்ட அதிகாரி யார் என்பது தெரியவில்லை.
கட்டட பணிக்கு பயன்படுத்தப்படும் பொருட்களால், மாணவர்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.