/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குடிநீர் புகார் தெரிவிக்க 'வாட்ஸாப்' எண் அறிவிப்பு
/
குடிநீர் புகார் தெரிவிக்க 'வாட்ஸாப்' எண் அறிவிப்பு
குடிநீர் புகார் தெரிவிக்க 'வாட்ஸாப்' எண் அறிவிப்பு
குடிநீர் புகார் தெரிவிக்க 'வாட்ஸாப்' எண் அறிவிப்பு
ADDED : மார் 28, 2025 10:40 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் குடிநீர் தொடர்பான புகார் தெரிவிக்க, மாவட்ட மற்றும் வட்ட அளவிலான 'வாட்ஸாப்' மொபைல் எண் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால், தனி அலுவலர்கள் வாயிலாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தற்போது, கோடை துவங்கியுள்ள நிலையில், குடிநீர் தொடர்பான புகார் தெரிவிக்க மாவட்ட அளவில் மற்றும் வட்டார அளவில் 'வாட்ஸாப்' எண்கள் துவக்கப்பட்டு உள்ளது.
எனவே, தங்கள் பகுதிகளில் உள்ள குடிநீர் தொடர்பான புகாரை மட்டும், இந்த 'வாட்ஸாப்' எண்களில் குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கலாம். புகார்தாரரின் பெயர் மற்றும் முகவரியை தெரிவிக்க வேண்டும். மாவட்ட அளவிலான குடிநீர் தொடர்பாக, மாவட்ட உதவி மைய எண் 94453 46311ல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வட்டார அளவிலான உதவி மைய எண் விபரம்
ஊராட்சி ஒன்றியம் மொபைல்போன் எண்
எல்லாபுரம் 77082 69571
கும்மிடிப்பூண்டி 75488 01201
கடம்பத்துார் 73059 21319
மீஞ்சூர் 79046 65459
பள்ளிப்பட்டு 82208 04959
பூந்தமல்லி 70100 44876
பூண்டி 63853 48540
புழல் 70105 59670
ஆர்.கே.பேட்டை 77087 36007
சோழவரம் 75581 98922
திருத்தணி 7904 996062
திருவாலங்காடு 75501 77471
திருவள்ளூர் 75501 47704
வில்லிவாக்கம் 75400 28312