/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கம்பத்தில் படர்ந்த கொடிகள் சீரமைப்பு பணி எப்போது?
/
கம்பத்தில் படர்ந்த கொடிகள் சீரமைப்பு பணி எப்போது?
ADDED : நவ 11, 2024 03:14 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி நகர துணை மின் நிலையத்தில் இருந்து, நகர்ப்புறம், கிராமபுறம் என, இரு பிரிவுகளாக மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதில், கிராமபுற மின் வினியோக பகுதிகளில், மழைக்கு முந்தைய பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுவது இல்லை என, கிராமவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, கும்மிடிப்பூண்டி அருகே நத்தம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மின்மாற்றி மற்றும் மின்கம்பங்களில் செடி, கொடிகள் படர்ந்துள்ளன.
மேலும், ஏராளமான மரக்கிளைகள், மின் பாதையை உரசியபடி வளர்ந்துள்ளதாக கிராமவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர். தடையில்லா மின் வினியோகத்தை உறுதி செய்யும் விதமாக, உடனடியாக கிராமப்புற மின்பாதையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
அதற்கு கும்மிடிப்பூண்டி துணை மின் நிலையத்தினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.