/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மழையின் போது சேதமடையும் தரைப்பாலத்திற்கு விடிவு எப்போது?
/
மழையின் போது சேதமடையும் தரைப்பாலத்திற்கு விடிவு எப்போது?
மழையின் போது சேதமடையும் தரைப்பாலத்திற்கு விடிவு எப்போது?
மழையின் போது சேதமடையும் தரைப்பாலத்திற்கு விடிவு எப்போது?
ADDED : ஜன 16, 2024 11:44 PM

எல்லப்பநாயுடுபேட்டை, பூண்டி ஒன்றியம் எல்லப்பநாயுடுபேட்டை ஊராட்சியில் கொசஸ்தலையாறு பாய்கிறது. இந்த ஆற்றை கடந்து கிராமத்திற்கு செல்ல, 35 ஆண்டுகளுக்கு முன் தரைப்பாலம் அமைக்கப்பட்டது.
கடந்தாண்டு பருவமழையின் போது, ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது, தரைப்பாலம் சேதமடைந்தது. அதன்பின், தற்காலிகமாக பொதுப்பணித் துறையினரால், மணல் மூட்டைகள் கொண்டு சீரமைக்கப்பட்டது.
இந்நிலையில் சீரமைக்கப்பட்ட தரைப்பாலத்தின் வளைவில் டிராக்டர், லாரி போன்ற வாகனங்கள் சென்றால், மீண்டும் சேதமடையும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மேலும் ஒவ்வொரு முறை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதும் இப்பகுதி சேதமடைவது தொடர்கிறது. அதேபோல, கிராமத்திற்கு செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது.
எனவே, இப்பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.