/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீஞ்சூர் வரதாஜ பெருமாள் கோவில் குளத்திற்கு விமோசனம் எப்போது?
/
மீஞ்சூர் வரதாஜ பெருமாள் கோவில் குளத்திற்கு விமோசனம் எப்போது?
மீஞ்சூர் வரதாஜ பெருமாள் கோவில் குளத்திற்கு விமோசனம் எப்போது?
மீஞ்சூர் வரதாஜ பெருமாள் கோவில் குளத்திற்கு விமோசனம் எப்போது?
ADDED : அக் 12, 2024 12:01 AM

மீஞ்சூர்:வடகாஞ்சி என அழைக்கப்படும் மீஞ்சூரில் வரதராஜ பெருமாள் கோவில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. காஞ்சிபுரம் வரதாஜ பெருமாள் கோவில் போன்று, இங்கும் ஒவ்வொரு ஆண்டும், 10 நாட்கள் வைகாசி பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது புரட்டாசி மாதம் என்பதால் பக்தர்கள் அதிகளவில் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் இக்கோவிலின் பின்புறம் உள்ள, ‛ஆனந்தபுஷ்கரணி' என பெயர் கொண்ட திருக்குளம் பராமரிப்பு இன்றி கிடக்கிறது.
குளம் முழுதும் ஆகாயத்தாமரை, கோரைப்புற்கள் மற்றும் முள்செடிகள் சூழ்ந்து கிடக்கின்றன. சுற்றியுள்ள குடியிருப்புகளின் கழிவுநீர் தொட்டியாகவும், குப்பை கொட்டும் இடமாகவும் மாறி உள்ளது.
பராமரிப்பு இன்றி பாழாகி வரும் குளத்தை கண்டு, கோவிலுக்கு வரும் பக்தர்கள் வேதனை அடைகின்றனர்.
மீஞ்சூர் பகுதியில் நிலத்தடி நீரின் உவர்ப்புத்தன்மை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற நீர்நிலைகளை உரிய முறையில் பராமரிக்கப்படாமல் உள்ளன.
பல ஆண்டுகளாக குளம் இதே நிலையில் இருப்பதால், இதற்கு எப்போது விமோசனம் கிடைக்கும் என பக்தர்கள் காத்திருக்கின்றனர்.
பழமை வாய்ந்த இக்கோவிலின் குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.