/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சேதமடைந்த பள்ளி சுற்றுச்சுவர் சீரமைக்கும் பணி எப்போது?
/
சேதமடைந்த பள்ளி சுற்றுச்சுவர் சீரமைக்கும் பணி எப்போது?
சேதமடைந்த பள்ளி சுற்றுச்சுவர் சீரமைக்கும் பணி எப்போது?
சேதமடைந்த பள்ளி சுற்றுச்சுவர் சீரமைக்கும் பணி எப்போது?
ADDED : ஜன 07, 2026 06:47 AM

திருவாலங்காடு: கூர்மவிலாசபுரம் அரசு துவக்கப் பள்ளி சுற்றுச்சுவர் சேதமடைந்து உள்ளதால், அதை சீரமைக்க வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.
திருவாலங்காடு ஒன்றியம் கூர்மவிலாசபுரம் ஊராட்சியில், கனகம்மாசத்திரம் --- தக்கோலம் மாநில நெடுஞ்சாலையில் அரசு துவக்கப்பள்ளி அமைந்துள்ளது. தபால் நிலையம், ஊராட்சி அலுவலகம், நுாலகம் என, ஒருங்கிணைந்த வளாகத்தில் பள்ளி அமைந்துள்ளது.
இந்த வளாகத்தை சுற்றி, 20 ஆண்டுகளுக்கு முன் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. இந்நிலையில், சுற்றுச்சுவரை சமூக விரோதிகள் உடைத்ததால், தற்போது சுற்றுச்சுவர் பல இடங்களில் சேதமடைந்து, உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
மேலும், பள்ளி மாணவர்கள் விளையாடும் போது அசம்பாவிதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், பெற்றோர் அச்சத்தில் தவித்து வருகின்றனர். எனவே, ஒருங்கிணைந்த பள்ளி வளாக சுற்றுச்சுவரை சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.

