தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கொள்முதல் நிலையம் அமைவது எப்போது? அறுவடை முடிந்து விவசாயிகள் காத்திருப்பு

கொள்முதல் நிலையம் அமைவது எப்போது? அறுவடை முடிந்து விவசாயிகள் காத்திருப்பு

கொள்முதல் நிலையம் அமைவது எப்போது? அறுவடை முடிந்து விவசாயிகள் காத்திருப்பு


UPDATED : செப் 15, 2026 04:14 PM

ADDED : செப் 15, 2026 03:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 15, 2026 04:14 PM ADDED : செப் 15, 2026 03:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொன்னேரி:இலுப்பாக்கம் கிராமத்தில், நேரடி நெல் கொள்முதல் திறப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதால், அறுவடை முடிந்தும், நெல் மணிகளை விற்பனை செய்வதற்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

மீஞ்சூர் வேளாண் வட்டத்தில், சொர்ணவாரி பருவத்திற்கு, 14,500 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்பட்டிருந்தது. பூச்சி மற்றும் நோய் தாக்குதல், எதிர்பார்த்த மழையின்மை என, பிரச்னைகளுக்கு இடையே பயரிடப்பட்ட நெற்பயிர்கள், தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகின்றன.

விவசாயிகளிடம் இருந்து அறுவடை செய்யப்படும் நெல் மூட்டைகளை வாங்குவதற்காக, மாவட்டம் முழுதும், 50 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளதாக, மாவட்ட நிர்வாகம் இரு தினங்களுக்கு முன் அறிவித்தது.

பொன்னேரி அடுத்த இலுப்பாக்கம் கிராமத்தில், ஆண்டுதோறும் நெல் கொள்முதல் திறக்கப்படும். இதற்காக அங்கு, 35 லட்சம் ரூபாய் செலவில், தமிழக அரசு கிடங்கு அமைத்துள்ளது.

இந்நிலையில், நேற்று வரை இலுப்பாக்கத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாமல், கிடங்கு கட்டடம் பூட்டியே கிடக்கிறது.

அறுவடை முடிந்த விவசாயிகள், நெல் மணிகளை பாதுகாக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் மழை பொழிவு இருப்பதால், அறுவடை செய்தவற்றை பாதுகாப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:

வெளிச்சந்தையை விட, அரசு கொள்முதல் நிலையங்களில் கூடுதல் விலை கிடைக்கிறது. இது, விவசாயிகளுக்கு மகசூல் பாதிப்பால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட உதவும்.

இதுவரை, விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகளை பெறுவதற்கு முன்பதிவு கூட துவங்கவில்லை. அறுவடை செய்த நெல்லை உலர வைத்து, மூட்டைகளில் தனியார் கிடங்குளில் வாடகை கொடுத்து வைத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

தனியார் கிடங்குகள் கிடைக்காத விவசாயிகள், வேறு வழியின்றி வெளிச்சந்தையில் குறைவான விலைக்கு நெல் மூட்டைகளை விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதில் காலதாமதம் ஏற்படுவது, வியாபாரிகளுக்கே லாபகரமானதாக இருக்கும். எனவே, இலுப்பாக்கத்தில் கொள்முதல் நிலையத்தை திறக்க, மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us