/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளி எதிரே ஓடுகள் அகற்றுவது எப்போது?
/
பள்ளி எதிரே ஓடுகள் அகற்றுவது எப்போது?
ADDED : நவ 25, 2025 03:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர். கே.பேட்டை ஒன்றியம், மயிலாடும்பாறை கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
உடைந்த ஓடுகளுடன் இருந்த வகுப்பறை கட்டடத்தின் கூரை அகற்றப்பட்டு, சமீபத்தில், 'போம் இன்ஜெக்டட்' இரும்பு தகடுகளுடன் கூடிய நவீன கூரை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், அகற்றப்பட்ட பழைய கூரை ஓடுகள், பள்ளி நுழைவாயில் எதிரே குவித்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஓடுகளில் விஷ பூச்சிகள் குடியேறும் அபாய நிலை உள்ளது.
இதனால், மாணவர்களும், பெற்றோரும் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.
எனவே, இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -எம்.சச்சிதானந்தம், மயிலாடும்பாறை.

