வெள்ளேரிதாங்கல் ரேஷன் கடை பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
வெள்ளேரிதாங்கல் ரேஷன் கடை பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
ADDED : மார் 13, 2026 05:35 AM

அ நிறம் | அளவு
வெள்ளேரிதாங்கல்: கடம்பத்துார் ஒன்றியம் வெள்ளேரிதாங்கல் ஊராட்சியில் ரேஷன் கடை சேதமடைந்து, இடிந்து விழும் அபாய நிலையில் இருந்தது. இதையடுத்து, திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 16 லட்சம் ரூபாய் மதிப்பில் ரேஷன் கடை கட்டும் பணி, கடந்த செப்டம்பர் மாதம் துவங்கப்பட்டது.
ஒரு வாரத்திற்கு முன், திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன் திறந்து வைத்தார். ஆனால், தற்போது வரை ரேஷன் கடை பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருகிறது.
எனவே, புதிய ரேஷன் கடையை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
