/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சித்துார்நத்தம் சாலை படுமோசம் சீரமைக்கும் பணி எப்போது?
/
சித்துார்நத்தம் சாலை படுமோசம் சீரமைக்கும் பணி எப்போது?
சித்துார்நத்தம் சாலை படுமோசம் சீரமைக்கும் பணி எப்போது?
சித்துார்நத்தம் சாலை படுமோசம் சீரமைக்கும் பணி எப்போது?
ADDED : ஆக 04, 2025 11:03 PM
கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி அருகே போக்குவரத்துக்கு லாயக்கற்று, படுமோசமான நிலையில் உள்ள ஈகுவார்பாளையம் - சித்துார்நத்தம் சாலையை, உடனடியாக சீரமைக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் கிராமத்தில் இருந்து சித்துார்நத்தம் வரையிலான, 2 கி.மீ., சாலையை, கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகம் பராமரித்து வருகிறது. இச்சாலை வழியாக சித்துார்நத்தம், காரம்பேடு, குருவராஜகண்டிகை உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனர்.
வாரந்தோறும், 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணியர், இச்சாலை வழியாக ஈகுவார்பாளையம் கிராமத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்கின்றனர்.
இச்சாலையை பயன்படுத்த முடியாத அளவிற்கு குண்டும், குழியுமாக மாறியுள்ளது.
இதனால், கிராம மக்கள், கர்ப்பிணியர், தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதுகுறித்து, கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகத்திற்கு பலமுறை மனு அளித்தும், தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என, கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகம் ஆய்வு செய்து, உடனடியாக சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.