/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின்விளக்குகள் பொருத்தினால் கரண்ட் பில் கட்டுவது யார்? நெ.சா.துறை பதிலால் மக்கள் அதிர்ச்சி
/
மின்விளக்குகள் பொருத்தினால் கரண்ட் பில் கட்டுவது யார்? நெ.சா.துறை பதிலால் மக்கள் அதிர்ச்சி
மின்விளக்குகள் பொருத்தினால் கரண்ட் பில் கட்டுவது யார்? நெ.சா.துறை பதிலால் மக்கள் அதிர்ச்சி
மின்விளக்குகள் பொருத்தினால் கரண்ட் பில் கட்டுவது யார்? நெ.சா.துறை பதிலால் மக்கள் அதிர்ச்சி
ADDED : ஏப் 20, 2025 07:32 PM
மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் வடசென்னை அனல் மின்நிலையங்கள், ஆயில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. சென்னை எண்ணுார், கத்திவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் பணிக்கு வந்து செல்கின்றனர்.
இவர்கள் அங்குள்ள எண்ணுார் - வடசென்னை அனல் மின்நிலைய சாலை வழியாக பயணிக்கின்றனர். இந்த சாலையில் மின்விளக்குகள் பொருத்தப்படாமல் உள்ளது. இதனால், இரவு நேரங்களில் தொழிலாளர்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.
இதுகுறித்து எண்ணுார், தாழங்குப்பம், அத்திப்பட்டு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது:
மின்விளக்கு இல்லாததால், இருட்டை பயன்படுத்தி சமூக விரோதிகள், இருசக்கர வாகன ஓட்டிகளை வழிமடக்கி, சிறு சிறு வழிப்பறிகளில் ஈடுபடுகின்றனர். சாலையோரங்களில் செடிகள் வளர்ந்துள்ளன. இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்துகள் ஏற்படுகிறது.
இந்த சாலை, சென்னை மாநகராட்சியின் ஒன்றாவது வார்டு மற்றும் அத்திப்பட்டு ஊராட்சியின் எல்லையில் உள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மின்விளக்குள் அமைத்து பராமரிக்கப்படுகிறது.
அத்திப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சாலையைில் மின்விளக்குகள் அமைக்க, பொன்னேரி நெடுஞ்சாலை துறையினரிடம் தெரிவித்தால், 'இது தங்களது கட்டுப்பாட்டில் இல்லை' என, கைவிரிக்கின்றனர்.
சென்னை சேப்பாகத்தில் உள்ள நெடுஞ்சாலை துறையின் கீழ், இந்த சாலை இருப்பதை அறிந்து, அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டால், 'மின்விளக்குகள் பொருத்தினால், யார் கரண்ட் பில் கட்டுவது' என, எங்களையே திருப்பி கேட்கின்றனர்.
பல்வேறு தொழில் நிறுவனங்கள் இருந்தும், இச்சாலையில் மின்விளக்குகள் அமைக்க யாரும் முன்வரவில்லை. தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து, வடசென்னை அனல்மின் நிலைய சாலையில் மின்விளக்குகளை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

