/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கணவரை கொன்ற வழக்கில் மனைவி கைது
/
கணவரை கொன்ற வழக்கில் மனைவி கைது
ADDED : நவ 04, 2024 01:56 AM
பொன்னேரி:சோழவரம் அடுத்த பம்மதுகுளம், காட்டுநாயக்கன் பழங்குடி பகுதியை சேர்ந்தவர் கருணாகரன், 39; ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சரஸ்வதி, 35.
கருணாகரன் தினமும் குடித்துவிட்டு மனைவி, பிள்ளைகளிடம் தகராறு செய்து வந்தார். செப்டம்பர் 27 ம் தேதி, குடிபோதையில் வீட்டிற்கு வந்த கருணாகரன் மனைவியிடம் சண்டையிட்டதுடன், எட்டு வயது மகனுக்கு மதுவை வற்புறுத்தி குடிக்க வைக்க முயன்றார்.
இதில், கோபம் அடைந்த சரஸ்வதி வீட்டில் இருந்த இரும்பு சுத்தியலை எடுத்து கருணாகரன் தலையில் அடித்தார். பலத்த காயங்களுடன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் கடந்த மாதம் 5ம் தேதி இறந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக சோழவரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். கருணாகரன் இறந்ததை தொடர்ந்து கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.
நேற்று கருணாகரன் மனைவி சரஸ்வதியை போலீசார் கைது செய்தனர்.