தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ புதிதாக ரேஷன் கடை கட்டப்படுமா?

 புதிதாக ரேஷன் கடை கட்டப்படுமா?

 புதிதாக ரேஷன் கடை கட்டப்படுமா?


ADDED : டிச 16, 2025 06:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 16, 2025 06:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவாலங்காடு: வீரராகவபுரம் கிராமத்தில், ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டுமென, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருவாலங்காடு ஒன்றியம் வீரராகவபுரம் கிராமத்தில், 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள ரேஷன் கடையில், 200க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள், உணவு பொருட்கள் வாங்கி பயனடைகின்றனர்.

கடந்த 45 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடத்தில் ரேஷன் கடை செயல்படுகிறது. இந்த கட்டடம் சேதமடைந்து உள்ளதால், மழைக்காலத்தில் அரிசி, சர்க்கரை உள்ளிட்டவை நனைந்து வீணாகின்றன.

இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும், தற்போது வரை ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் அமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

எனவே, திருவாலங்காடு ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us