/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
லட்சுமிபுரத்தில் நிழற்குடை அமைக்கப்படுமா?
/
லட்சுமிபுரத்தில் நிழற்குடை அமைக்கப்படுமா?
ADDED : ஏப் 28, 2025 01:57 AM
கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை - சத்தியவேடு மாநில நெடுஞ்சாலையில், ஐயர்கண்டிகை கிராமம் அருகே அமைந்துள்ளது லட்சுமிபுரம் பேருந்து நிறுத்தம். ஏ.என்.குப்பம், ஆர்.என். கண்டிகை, லட்சுமிபுரம் பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்கள் அதை பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த இடத்தில், பயணயரின் வசதிக்காக நிறழ்குடை ஒன்று இருந்தது. இரு ஆண்டுகளுக்கு முன் சாலை விரிவாக்க பணிகளுக்காக, நிழற்குடையை நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர். சாலை விரிவாக்க பணி முடிந்து ஆறு மாதங்கள் கடந்த நிலையில், இதுநாள் வரை அங்கு நிழற்குடை அமைக்கப்படவில்லை.
பயணியர் நலன் கருதி உடனடியாக லட்சுமிபுரத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

