கும்மிடி - திருவள்ளூர் இடையே கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
கும்மிடி - திருவள்ளூர் இடையே கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
ADDED : ஜன 27, 2026 05:09 AM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி - திருவள்ளூர் இடையே கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் என, கும்மிடி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தொழில் நகரமான கும்மிடிப்பூண்டி பகுதியில் இருந்து, தினமும் நுாற்றுக்கணக்கானோர் மாவட்ட தலைநகரமான திருவள்ளூர் சென்று வருகின்றனர். சாலை மார்க்கமாக மட்டுமே திருவள்ளூர் செல்ல முடியும் என்பதால், பொது போக்குவரத்துக்கு பேருந்துகளை மட்டுமே நம்பி உள்ளனர்.
கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் இருந்து, காலை 7:30 மணி, 11:30 மணி, மாலை 3:30 மணி, இரவு 8:00 மணி என, நான்கு முறை மட்டும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த சேவை போதுமானதாக இல்லை. கும்மிடிப்பூண்டி மக்களின் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படாததால், பயணியர் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே, காலை - மாலை நேரங்களில் கூடுதலாக அரசு பேருந்துகள் இயக்க வேண்டும். அதன் வாயிலாக, திருவள்ளூர் மட்டுமின்றி சிறுவாபுரி, ஆரணி, பெரியபாளையம், வெங்கல் செல்லும் பயணியரும் பயனடைவர் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
