/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிந்தலகுப்பம் பூங்கா சீரமைக்கப்படுமா?
/
சிந்தலகுப்பம் பூங்கா சீரமைக்கப்படுமா?
ADDED : ஆக 15, 2025 09:27 PM
கும்மிடிப்பூண்டி:சிந்தலகுப்பம் பூங்காவை சீரமைக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி ஒன்றியம், சித்தராஜகண்டிகை ஊராட்சிக்கு உட்பட்டது சிந்தலகுப்பம் கிராமம். அங்கு ஏராளமான குடியிருப்பு பகுதிகள் உள்ளன.
கடந்த 2021- - 22ம் ஆண்டில், சிந்தலகுப்பம் கிராமத்தில், நான்கு லட்சம் ரூபாய் செலவில், நடைபாதையுடன் பூங்காவை சுற்றி வேலி அமைக்கப்பட்டது.
தற்போது, முறையான பராமரிப்பின்றி, பூங்கா முழுதும் செடி, கொடிகள் படர்ந்து, நடைபாதை சேதமடைந்து உள்ளது.
சித்தராஜகண்டிகை ஊராட்சி நிர்வாகம், பூங்காவில் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு, முறையாக பராமரிக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.