/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆரணி ஆற்றுப்பாலத்தில் மின்விளக்கு அமைக்கப்படுமா?
/
ஆரணி ஆற்றுப்பாலத்தில் மின்விளக்கு அமைக்கப்படுமா?
ADDED : ஜன 14, 2024 11:50 PM

பொன்னேரி: பொன்னேரி அடுத்த சின்ன மனோபுரம், பெரிய மனோபுரம், கொளத்துமேடு கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், பெரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்த கிராமங்களுக்கும், பள்ளி அமைந்துள்ள பெரும்பேடு பகுதிக்கும் இடையே ஆரணி ஆறு பயணிப்பதால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், 2018ல், நபார்டு திட்டத்தின் கீழ், 2.18 கோடியில் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டது
பாலம் அமைக்கப்பட்ட நிலையில், அதில் மின்விளக்குள் பொருத்தப்படாமல் இரவு நேரங்களில் பாலம் இருண்டு உள்ளது.
மது அருந்துபவர்கள் பாலத்தில் அமர்ந்து 'குடி'மையமாக மாற்றுகின்றனர். மதுபாட்டில்களை உடைத்துவிட்டு செல்கின்றனர்.
போதை ஆசாமிகளால், பாலத்தை கடந்து செல்லும் பெண்கள், பள்ளி மாணவர்கள் அச்சத்திற்கு ஆளாகின்றனர். இருட்டு அவர்களுக்கு சாதகமாக இருப்பதால், பாலத்தில் மின்விளக்குகள் அமைக்க மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.