/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் அமையுமா?
/
அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் அமையுமா?
ADDED : பிப் 17, 2024 11:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாண்டூர், பூண்டி ஒன்றியம் பட்டரைபெருமந்துார் ஊராட்சிக்கு உட்பட்டது வரதாபுரம் கிராமம். இங்கு பொன்னாத்தம்மன் குளம் அருகே அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது.
இந்த மையத்தில் 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் ஏதுமின்றி வெட்டவெளியாகக் காட்சியளிக்கிறது.
மேலும் மையத்தின் பின்புறம் கோவில் குளம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகள் நலன் கருதி மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.