/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தக்கான் குளக்கரை எழில் பெறுமா? யோக நரசிம்மரின் பக்தர்கள் ஆதங்கம்
/
தக்கான் குளக்கரை எழில் பெறுமா? யோக நரசிம்மரின் பக்தர்கள் ஆதங்கம்
தக்கான் குளக்கரை எழில் பெறுமா? யோக நரசிம்மரின் பக்தர்கள் ஆதங்கம்
தக்கான் குளக்கரை எழில் பெறுமா? யோக நரசிம்மரின் பக்தர்கள் ஆதங்கம்
ADDED : ஜன 29, 2024 06:58 AM

சோளிங்கர்: ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில், பெரிய மலையில் யோக நரசிம்மர் அருள்பாலித்து வருகிறார். பெருமாளின் கட்டளையை நிறைவேற்ற, அவருக்கு நேர் எதிரில் சின்னமலையில் யோக அனுமன் அருள்பாலித்து வருகிறார்.
யோக நரசிம்மரிடம் பக்தர்கள் வேண்டிக்கொண்டதை நிறைவேற்ற அனுமன் காத்திருப்பதாக ஐதீகம். கொண்ட பாளையம் கூட்டு சாலையில், தீர்த்த குளமாக தக்கான் குளம் அமைந்துள்ளது. குளத்தின் உட்புறம் இரும்பு வேலி அமைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆனால், வெளிப்புற கரையில் பராமரிப்பு மோசமாக உள்ளது. வடக்கு கரையில், புதர் மண்டி கிடைக்கிறது. சோளிங்கரில் இருந்து அரக்கோணம் செல்லும் சாலையை ஒட்டி, இந்த குளக்கரை அமைந்துள்ளது. இந்த வழியாக செல்பவர்களுக்கு குளம் இருப்பதே தெரியாத அளவிற்கு புதர் வளர்ந்துள்ளது.
மேலும், குளத்தின் தெற்கு மற்றும் கிழக்கு கரையை ஒட்டி, கழிவுநீரும், குப்பையும் தேங்கிக்கிடக்கிறது. இவற்றை சுத்தம் செய்யாமல், அவ்வப்போது கிருமிநாசினி துாவப்பட்டு வருகிறது. பெருமாளின் 108 திவ்யதேசத்தில் ஒன்றான இந்த தலத்திற்கு தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் ஆன்மிக பயணமாக வந்து செல்கின்றனர். சிறப்பு மிக்க இந்த தலத்தை சுத்தமாக பராமரிக்கவும், தக்கான் குளக்கரையை புனரமைக்கவும் பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
குளக்கரையில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி, நந்தவனம் மற்றும் பூங்கா அமைத்தால், ஆன்மிக தலத்தின் எழில் பெறும்.