/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொலிவு இழந்த சிறுவர் பூங்கா முறையாக பராமரிக்கப்படுமா?
/
பொலிவு இழந்த சிறுவர் பூங்கா முறையாக பராமரிக்கப்படுமா?
பொலிவு இழந்த சிறுவர் பூங்கா முறையாக பராமரிக்கப்படுமா?
பொலிவு இழந்த சிறுவர் பூங்கா முறையாக பராமரிக்கப்படுமா?
ADDED : ஆக 25, 2025 10:46 PM
கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி என்.எம்.எஸ்., சிறுவர் பூங்காவை, பேரூராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்க வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட என்.எம்.எஸ்., நகரில், ஊரமைப்பு வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ், 2013ல் பூங்கா மற்றும் சிறுவர் விளையாடி மகிழ ஊஞ்சல், ராட்டினம், சறுக்கு மரம் உள்ளிட்ட உபகரணங்கள் அமைக்கப்பட்டன.
கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள், தங்கள் குழந்தைகளுடன் பொழுதுபோக்கும் முக்கிய இடமாக பூங்கா இருந்து வந்தது. சில ஆண்டுகளாக, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம், பூங்காவை முறையாக பராமரிக்கவில்லை.
இதனால், விளையாட்டு உபகரணங்கள் உடைந்து, செடி, கொடிகள் கருகின. தற்போது, பூங்கா முழுதும் வறண்ட பகுதி போல் காட்சியளிக்கிறது.
எனவே, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம், உடனடியாக பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.