/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மேட்டுப்பாளையத்தில் மழைநீர் செல்ல தோண்டப்பட்ட பள்ளம் சீரமைக்கப்படுமா?

ADDED : டிச 31, 2024 01:17 AM

பொன்னேரி,பொன்னேரி அடுத்த, மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து, அனுப்பம்பட்டு, தேவதானம், வேளூர் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக, திருவெள்ளவாயல் செல்லும் இதர மாவட்ட சாலை உள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் பெய்த கனமழை காரணமாக, மேட்டுப்பாளையம், இலவம்பேடு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.
அதை வெளியேற்றுவதற்காக மேட்டுப்பாளையம் பகுதியில், மேற்கண்ட சாலையின் இருபுறமும் பள்ளங்கள் தோண்டி, அங்கு துார்ந்து கிடந்த சிமென்ட் உருளை சீரமைக்கப்பட்டது. பின் அதன் வழியாக மழைநீர் வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில், சாலையின் இருபுறமும் பள்ளங்கள் தோண்டி இரண்டு மாதங்கள் ஆன நிலையில், மேற்கண்ட பகுதியில் சாலை சீரமைக்கப்படாமல் இருக்கிறது.
எதிர் எதிரே வாகனங்கள் அப்பகுதியை கடக்கும்போது பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்களில் சிக்கும் நிலை உள்ளது. மேற்கண்ட பகுதியில் சீரமைப்பு பணிகளை, நெடுஞ்சாலைத் துறையினர் மேற்கொள்ள வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.