/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரெட்டிக்குளத்தில் கொட்டப்படும் குப்பை சுற்றுச்சுவர் அமைத்து பாதுகாக்கப்படுமா?-
/
ரெட்டிக்குளத்தில் கொட்டப்படும் குப்பை சுற்றுச்சுவர் அமைத்து பாதுகாக்கப்படுமா?-
ரெட்டிக்குளத்தில் கொட்டப்படும் குப்பை சுற்றுச்சுவர் அமைத்து பாதுகாக்கப்படுமா?-
ரெட்டிக்குளத்தில் கொட்டப்படும் குப்பை சுற்றுச்சுவர் அமைத்து பாதுகாக்கப்படுமா?-
ADDED : நவ 17, 2025 03:17 AM

திருத்தணி: ரெட்டிக்குளத்தில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருத்தணி நகராட்சியில் ரெட்டிக்குளம் என அழைக்கப்படும் சண்முகதீர்த்த குளம் உள்ளது. இக்குளத்தில் தண்ணீர் இருந்தால் பெரிய தெரு, பாரதியார் தெரு, முருகப்ப நகர் மற்றும் கீழ் பஜார் தெரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
ஆண்டுதோறும் காணும் பொங்கல் தினத்தன்று, உற்சவர் முருகப்பெருமான் மலைக்கோவிலில் இருந்து ஊர்வலமாக பெரிய தெருவில் உள்ள சண்முகதீர்த்த குளம் பகுதியில் உள்ள மண்டபத்தில் எழுந்தருள்வார். அங்கு, உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெறும்.
இந்த பூஜைக்கு தேவையான தண்ணீர், ரெட்டிக்குளத்தில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு புனிதமாக கருதப்படும் ரெட்டிக்குளம், போதிய பராமரிப்பு இல்லாமல் குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது.
மேலும், குளத்தை துார்வாரி சீரமைக்காததால், கடந்த மாதம் பெய்த பலத்த மழையால் குளம் நிரம்பியது. குளத்தில் ஆகாய தாமரை, கோரை புல் போன்றவை வளர்ந்துள்ளன. எனவே, ரெட்டிக்குளத்தை சீரமைத்து, சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைத்தால், குப்பைகள் கொட்டுவதை தடுக்கலாம்.
எனவே, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விரைந்து நடவடிக்கை எடுத்து, குளத்தை சீரமைக்க வேண்டும். மேலும், சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, அப்பகு திமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

