/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மணல் கொள்ளை அமோகம் வருவாய் துறை விழிக்குமா?
/
மணல் கொள்ளை அமோகம் வருவாய் துறை விழிக்குமா?
ADDED : ஏப் 13, 2025 02:38 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியத்தில் குப்பம்கண்டிகை பகுதியில் பாயும் கொசஸ்தலையாறு பகுதியில், மணல் கொள்ளை அதிகரித்துள்ளது. குறிப்பாக, தரைப்பாலம் அருகே கோணிப்பைகளில் மணல் அள்ளி செல்வது தொடர்கிறது.
அதேபோல், கொசஸ்தலையாற்றில் எல்.வி.புரம், பாகசாலை பகுதிகளிலும், இருசக்கர வாகனங்கள் வாயிலாக இரவில் மணல் கொள்ளை அமோகமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து குப்பம்கண்டிகை பகுதிவாசிகள் கூறியதாவது:
கொசஸ்தலையாற்றில், இரவு 12:00 மணிக்கு மேல் வரும் மர்மநபர்கள், அதிகாலை 4:00 மணி வரை மணல் அள்ளிச் செல்கின்றனர். தொடர்ந்து மணல் அள்ளி வரும் இவர்கள், ஓரளவு மணல் சேகரித்ததும், வீடு கட்டுவோருக்கு விற்பனை செய்கின்றனர். இச்செயல் சமீபகாலமாக அதிகரித்துள்ளது.
வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால், 'களத்திற்கு வருகிறோம்' எனக் கூறுகின்றனர்; ஆனால் வருவதில்லை. காவல் துறையினரோ கண்டுகொள்வதில்லை. இதுகுறித்து மாவட்ட எஸ்.பி., மற்றும் கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

