/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிப்காட் சாலை பள்ளம் சீரமைக்கப்படுமா?
/
சிப்காட் சாலை பள்ளம் சீரமைக்கப்படுமா?
ADDED : டிச 04, 2024 11:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், 23வது சாலை சந்திப்பில், மெகா பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது. எத்தனை முறை அந்த பள்ளத்தில் ஜல்லி, மணல் குவித்து சமன் செய்தாலும் அந்த இடம் மீண்டும் பள்ளமாகிறது.
இதனால், அந்த சாலை வழியாக செல்லும் கனரக வாகனங்கள் தடுமாற்றத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இலகுரக வாகனங்கள் மற்றும் டூ - - -வீலர்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றன. கும்மிடிப்பூண்டி சிப்காட் நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து நிரந்தரமாக அந்த சாலை பள்ளத்தை சீரமைக்க வேண்டும்.
- ஆர்.கமலநாதன், கும்மிடிப்பூண்டி.