/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாய்ந்த மின்கம்பம் சீரமைக்கப்படுமா?
/
சாய்ந்த மின்கம்பம் சீரமைக்கப்படுமா?
ADDED : டிச 16, 2025 06:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு: திருவாலங்காடு ---- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் வீரராகவபுரம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு, சுடுகாடு அருகே மின்கம்பம் சாய்ந்துள்ளது. மேலும், மின்கம்பத்தை சுற்றிலும் செடிகள் வளர்ந்து, மழைநீர் தேங்கியுள்ளது.
பலத்த காற்று வீசினால், மின்கம்பம் சாய்ந்து விடும் அபாயம் உள்ளது. எனவே, சாய்ந்த மின்கம்பத்தை சீரமைக்க, மின்வாரிய அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

