/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பயன்பாட்டிற்கு வருமா?
/
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பயன்பாட்டிற்கு வருமா?
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பயன்பாட்டிற்கு வருமா?
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பயன்பாட்டிற்கு வருமா?
ADDED : பிப் 03, 2024 11:24 PM

திருவாலங்காடு,: திருவாலங்காடு ஒன்றியம் களாம்பாக்கம் கிராமத்தில் நவீன சுத்திகரிப்பு நிலையம், 2019ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
திருவள்ளூர் சட்டமன்ற நிதியில் இருந்து 2017-- - 18ம் ஆண்டு 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட இந்த நவீன சுத்திகரிப்பு நிலையம் ஒரு மாதம் மட்டுமே பயன்பாட்டில் இருந்த நிலையில் மூடப்பட்டது.
மூன்றாண்டுகள் ஆகும் நிலையில், இதுவரை திறக்கப்படாமல் பயன்பாடின்றி வீணாகி வருகிறது. இதனால் கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடில் பகுதிவாசிகள் தவிக்கின்றனர்.
குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.