தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பராமரிப்பின்றி மத்துார் நுாலகம்

பராமரிப்பின்றி மத்துார் நுாலகம்

பராமரிப்பின்றி மத்துார் நுாலகம்


ADDED : பிப் 17, 2025 03:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2025 03:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், மத்துார் ஊராட்சிக்குட்பட்டது மத்துார் காலனி. இங்கு, 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, பத்து ஆண்டுகளுக்கு முன், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 9.50 லட்சம் ரூபாய் மதிப்பில், நுாலக கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.

ஆனால் நுாலகம் திறந்து பயன்பாட்டிற்கு விடாமல் பூட்டியே உள்ளது. இதனால் கட்டடம் போதிய பராமரிப்பின்றியும், நுாலகம் சுற்றியும் முட்செடிகள் வளர்ந்துள்ளன.

மேலும் கட்டடமும் சேதமடைந்து வருவதால், அரசு பணம் வீணாகி வருகிறது. இதனால் நுாலகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள புத்தகங்களும் போதிய பராமரிப்பின்றி உள்ளன.

நுாலகம் திறந்தால் மாணவர்கள் மற்றும் போட்டி தேர்வு எழுதுபவர்கள் பயன்பெறுவர்.எனவே, பழுதாகி உள்ள நுாலக கட்டடத்தை மீண்டும் சீரமைத்து, நுாலகம் திறந்து, வாசகர்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என, கலெக்டருக்கு அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us