ADDED : ஏப் 16, 2025 08:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே சித்தராஜகண்டிகை கிராமத்தில், டாஸ்மாக் கடை இயங்காத நேரத்தில், பெண் ஒருவர் கூடுதல் விலைக்கு மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து.
போலீசார் நடத்திய சோதனையில், அதே கிராமத்தைச் சேர்ந்த மஸ்தானம்மா, 45, என்ற பெண், அவரது வீட்டின் அருகே கூடுதல் விலைக்கு மது விற்றது தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து, 30 குவார்ட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். கும்மிடிப்பூண்டி கலால் போலீசார் விசாரித்து வருகின்றனர்.