ADDED : டிச 14, 2024 09:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூர் சோதனைச்சாவடியில் போலீசார் நேற்று வாகன சோதனை செய்தனர். அப்போது, ஆந்திராவில் இருந்து, சென்னை நோக்கி சென்ற ஆந்திர மாநில அரசு பேருந்தை நிறுத்தி பயணியரின் உடைமைகளை சோதனையிட்டனர்.
அதில் பயணித்த, சென்னை, புழல் பகுதியைச் சேர்ந்த முனீஸ்வரி, 34, என்ற பெண்ணிடம், இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி கலால் போலீசார், முனீஸ்வரியை கைது செய்து விசாரிக்கின்றனர்.