ADDED : பிப் 11, 2024 11:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியபாளையம் : -பெரியபாளையம் அருகே, திருக்கண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரீட்டா, 50. நேற்று முன்தினம் இவர் தனது சகோதரருடன் பைக்கில், திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்கு சென்றார்.
மாலை வீடு திரும்பும்போது, விஷ்ணுவாக்கம் கிராமம் அருகே வந்த போது, அங்கிருந்த வேகத்தடையில் பைக் ஏறி, இறங்கியபோது, நிலை தடுமாறி ரீட்டா பைக்கில் இருந்து கீழே விழுந்தார்.
பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து வெங்கல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.